
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆதித்யா எல்1 விண்கலன் சூரியனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டபடி நாளை காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர், ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்ததோடு தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தபடியாக சூரியனை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் ஆதித்யா எல்1 அனுப்பட உள்ளது.
இதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி, அதன் மாதிரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ இயக்குனர்கள் அமித்குமார் பாத்ரே, மோகன், யசோதா ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் மேற்கொண்டனர்.