மணிப்பூரில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா..? வெளியான அதிர்ச்சி தகவலும் உண்மை நிலவரமும்

மணிப்பூரில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா..? செய்திகள் வெளியான நிலையில் மணிப்பூர் தமிழ்சங்கம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக 7 மாவட்டங்களில் இனக்குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மொரே நகரத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு மணிப்பூர் தமிழ் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் மோரே நகரத்தில் தமிழர்கள் மற்ற இன மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக குக்கி மற்றும் தமிழ் மக்களுக்கு இடையே உள்ள உறவில் எந்த விரிசலும் இல்லை. மொரே நகரத்தை விட்டு யாரும் வெளியேற கட்டாயப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறது. உண்மை தன்மையை அறிந்து செய்திகளை வெளியிடுமாறு மணிப்பூர் தமிழ் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com