பெங்களூரு கஃபே
பெங்களூரு கஃபேமுகநூல்

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: மூளையாக செயல்பட்டது யார்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பெங்களூரு மத்திய சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டாரா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

பெங்களூரு மத்திய சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டாரா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு பெங்களூருவில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக நாசர் என்பவரை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவரை பெங்களூரு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபேவில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறையில் உள்ள நாசர் இந்த நாசகர சம்பவத்தின் மூளையாக இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இவர் சிறையில் இருந்து கொண்டே சபீர் என்பவரை தொடர்பு கொண்டு வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக அதிகாரிகள் சந்தேகின்றனர்.

பெங்களூரு கஃபே
ராமேஸ்வரம் கஃபே உணவகம் மீண்டும் திறப்பு

இதன் அடிப்படையிலேயே பெல்லாரியில் பதுங்கியிருந்த சபீரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மட்டும் இச்சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com