ராமேஸ்வரம் கஃபே உணவகம் மீண்டும் திறப்பு

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
ராமேஸ்வரம் கஃபே
ராமேஸ்வரம் கஃபேமுகநூல்

பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பொதுமக்கள் அச்சமின்றி வந்து செல்லும் வகையில் ஹோட்டல் நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து உணவகம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள ராமேஸ்வர கஃபே உணவக நிர்வாகத்தினர், "நடந்தது ஒரு துயரமான சம்பவம், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் துணை நிற்போம். அத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கு உதவ எந்த நேரத்திலும் நாங்கள் தயார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் கஃபே
பெங்களூரு குண்டுவெடிப்பு: தப்பிச் செல்லும் சந்தேக நபர்.. புதிய வீடியோவை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

முன்னதாக குந்தலஹாலி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த ஒன்றாம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவைத்த நபரை காவல்துறையினர், என்.ஐ.ஏ. அதிகாரிகள் உள்ளிட்டோர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com