INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIA
INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIApt web

இந்திரா எனும் ஆளுமை... செயல்களையும் பின்னணியையும் அலசும் விரிவான புத்தகம்

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கை வரலாறு குறித்து, வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதியுள்ள ‘INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIA’ என்ற புத்தகம் கவனம் பெற்று வருகிறது.
Published on

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கை வரலாறு குறித்து, வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதியுள்ள ‘INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIA’ என்ற புத்தகம் கவனம் பெற்று வருகிறது.

‘கட்சி கட்டமைப்புகள், நாடாளுமன்றம் போன்றவற்றைத் தாண்டி மக்களுடனான நேரடி தொடர்பு மூலம் அரசியலில் முக்கிய இடத்தை அடையும் சீஸரிஸ உத்தியை முதல்முதலில் கைக்கொண்டு வெற்றியை வசப்படுத்தியவர் இந்திரா காந்தி…’ இது வரலாற்றாசிரியர் ஸ்ரீநிவாச ராகவனின் கூற்று. அவருடைய சமீபத்திய நூலான INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIA வாசகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்நூல் குறித்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிம்பக் கட்டமைப்பு என்பது இல்லாமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் அரசியல் உத்தியை சரியாகப் புரிந்து கொள்ள உதவியதும் இந்திராதான் என்கிறார்.

INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIA
”இந்து என்பதால் கடைக்கோடியில் கொல்லப்படுகிறார்கள்; வாழ்வியல் முறைக்கே பிரச்னை..” - அண்ணாமலை பேச்சு

ஸ்ரீநாத் ராகவனின் புத்தகம் 1966இல் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி முதல்முறையாக பொறுப்பேற்றது முதல் 1984இல் அவர் படுகொலை செய்யப்பட்டது வரையிலான நிகழ்வுகளை விரிவாக அலசுகிறது. குறிப்பாக, இந்திரா காந்தி மூத்த தலைவர்களிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடத்திய போராட்டம், 1971 தேர்தலில் பெற்ற வெற்றி, 1977 தேர்தலில் ஜனதா கட்சியிடம் அடைந்த தோல்வி, பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவத்தை வழிநடத்திய விதம், நெருக்கடி நிலை அறிவிப்பு செய்யப்பட்டது என முக்கியமான சம்பவங்களின் பின்னணிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீநாத் ராகவன்
ஸ்ரீநாத் ராகவன்

இந்திரா காந்தியின் பல முடிவுகள் மற்றும் அதன் தாக்கங்கள் போன்றவை ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஸ்ரீநிவாச ராகவன் கூறியுள்ளார். வங்கிகள் தேசியமயமாக்கல் முடிவு குறித்துப் பேசியுள்ள அவர், இந்திய பொருளாதாரத்தை திட்டமிட்ட வளர்ச்சியின் வழியே நிலைபெறச் செய்ய விரும்பியதாகவும், ஆனாலும், அக்காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் வேறு ஒரு உத்தியை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுதான் வறுமை ஒழிப்போடு, தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திடும் தாராளமயமாக்கல் இணைந்த புதிய மாடல் என்றும், அதுவே இன்றும் இந்திய அரசியல் பொருளாதார சூழலை வடிவமைப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்திரா எனும் ஆளுமையின் செயல்களின் பின்னணியை விரிவாக புரிந்துகொள்ள உதவுகிறது ஸ்ரீநிவாச ராகவனின் புத்தகமும், அவரது கருத்துகளும்…

INDIRA GANDHI AND THE YEARS THAT TRANSFORMED INDIA
HEADLINES : முருக பக்தர்கள் மாநாடு முதல் ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடியின் பேச்சு வரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com