முருக பக்தர்கள் மாநாடு, இஸ்ரேல் ஈரான் போர்
முருக பக்தர்கள் மாநாடு, இஸ்ரேல் ஈரான் போர் pt web

HEADLINES : முருக பக்தர்கள் மாநாடு முதல் ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடியின் பேச்சு வரை

இன்றைய தலைப்புச் செய்திகளில் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானங்கள் முதல் இஸ்ரேல் ஈரான் போர் வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.
Published on

கோயில்களில் இருந்து அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் ... வரும் தேர்தலில் இந்து வாக்குவங்கியை நிரூபிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றம் ...

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக தெலுங்கைக்கூட கற்றுத்தரலாம் ... முருக பக்தர்கள் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேச்சு...

உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகபெருமான் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு.... இந்துக்களை சீண்டிப்பார்க்காதீர்கள் என்றும் எச்சரிக்கை....

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்
முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்pt

மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் சேகர் பாபு கருத்து... கடவுளின் பெயரால் கட்சியினர் மாநாடு நடத்துவதே தவறு என வைகோ விமர்சனம்....

தமிழகத்தில் ஆமை வேகத்தில் அந்நிய முதலீடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தேசிய அளவில் தமிழ்நாடு 5ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் சாடல்..

முருக பக்தர்கள் மாநாடு, இஸ்ரேல் ஈரான் போர்
”இந்து என்பதால் கடைக்கோடியில் கொல்லப்படுகிறார்கள்; வாழ்வியல் முறைக்கே பிரச்னை..” - அண்ணாமலை பேச்சு

ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்... இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடங்கியதை தாங்கள் முடிப்போம் என ஈரான் எச்சரிக்கை...

அமெரிக்கா தாக்குதல் எதிரொலியாக ஹார்முஸ் நீர்முனையை மூட ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் ... இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்பு ...

அயதுல்லா அலி கமெனி, டொனால்ட் ட்ரம்ப்
அயதுல்லா அலி கமெனி, டொனால்ட் ட்ரம்ப்pt web

ஈரான் அதிபர் பெஷ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சு... போர் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக எக்ஸ் தளத்தில் பதிவு...

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இருவர் கைது... பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் உறுதி...

சேலம், திருவள்ளூர், தேனி மாவட்டங்களில் கனமழை... திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மரம் விழுந்ததால், பாதிக்கப்பட்ட போக்குவரத்து...

முருக பக்தர்கள் மாநாடு, இஸ்ரேல் ஈரான் போர்
’இந்துக்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்..’ முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்!

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்... பிரார்த்தனையில் ஈடுபட்ட 20 பேர் உயிரிழந்த பரிதாபம்...

முதல் ஆசிய பந்துவீச்சாளர்.. வரலாறு படைத்த பும்ரா!
முதல் ஆசிய பந்துவீச்சாளர்.. வரலாறு படைத்த பும்ரா!

லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து... இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா...

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ரியல் மேட்ரிட் அணிக்கு முதல் வெற்றி... மெக்சிகோவின் பச்சுகா அணியை மூன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல்...

முருக பக்தர்கள் மாநாடு, இஸ்ரேல் ஈரான் போர்
கண்டனம் தெரிவிக்கும் பாகிஸ்தான்... ஐநாவை நாடும் ஈரான்... அமெரிக்க தாக்குதலில் அடுத்தடுத்த நிகழ்வுகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com