5 நாள்களாக ஏறுமுகம்.. இன்று சற்றே சரிவைச் சந்தித்த தங்கத்தின் விலை! காரணம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த 5 நாள்களாக அடுத்தடுத்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், இன்று சற்றே சரிவைச் சந்தித்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, கடந்த 5 நாள்களாக உயர்ந்து கொண்டே இருந்தது. மேலும், பொருளாதாரத்தில் தொடரும் அசாதாரண சூழல், அமெரிக்க வரி விதிப்பு போன்ற காரணங்களும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என கணிக்கப்பட்டது.
கடந்த நான்காம் தேதி, 74 ஆயிரத்து 360 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, அடுத்த நாளே 600 ரூபாய் உயர்ந்தது. ஆறாம் தேதி, சவரனுக்கு 80 ரூபாயும், ஏழாம் தேதி, சவரனுக்கு 160 ரூபாயும் அதிகரித்தது. நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒரே நாளில் அதிரடியாக 560 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் விலை 75 ஆயிரத்து 760 ஆக, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை, 25 ரூபாய் குறைந்து, 9 ஆயிரத்து 445 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றம் எதுவும் இன்றி, ஒரு கிராம் 127 ரூபாய் என விற்பனை ஆகிகிறது.