indias new hallmarking 9 carat gold jewellery
தங்கம்web

இனி கவலையில்லை.. நாமும் குறைந்த விலையில் தங்கம் வாங்கலாம்.. எப்படித் தெரியுமா?

இந்தியாவில், இனி 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
Published on
Summary

இந்தியாவில், இதுவரை 14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 காரட் தங்க நகைகளுக்கும் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 9 காரட் தங்க நகைகளை வாங்க இனி மக்கள் போட்டி போடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

9 காரட் தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச்சான்று

நாளுக்கு நாள் ஏற்றம் காணும் தங்கத்தின் விலையால், ஏழை மக்கள் குண்டுமணி தங்கம்கூட வாங்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்திய வாரங்களில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. முக்கியமாக, அமெரிக்கா தங்கக் கட்டிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்ததன் காரணமாக, நுகர்வோர்கள் தங்கம் வாங்குவதில் கூடுதல் பணத்தைச் செலவிடுவதில் சிரமப்படுகிறார்கள். ஜூன் மாதத்தில், உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் என்று பரவலாகக் கருதப்படும் இந்தியாவில், தங்க விற்பனையில் 60 சதவீத சரிவு பதிவாகியுள்ளது. இது நுகர்வோரின் நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகிழ்விக்கும் வகையில், இந்தியாவில், இனி 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களும் இனி குறைந்த விலையிலும் தங்க நகைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

indias new hallmarking 9 carat gold jewellery
தங்கம் விலைpt

பொதுவாக, தங்கத்தின் மதிப்பு பலவேறு ஹால்மார்க் முத்திரை வகைகளில் பிரிக்கப்படுகிறது. அந்த வகையில், BIS திருத்தம் எண் 2இன்படி, 9 காரட் தங்கம் (375 ppt) இப்போது அதிகாரப்பூர்வமாக கட்டாய ஹால்மார்க்கிங் கீழ் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, ஹால்மார்க் செய்யப்பட்ட தூய்மைப் பொருட்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் 14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K ஆகியவை அடங்கும். அந்தப் பட்டியலில் சமீபத்தில் 9K தங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, 9 கேரட் தங்க நகையில், 37.5 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம் இருக்கும். மீதமுள்ள 62.5 சதவீதம் தாமிரம், வெள்ளி அல்லது துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்களைக் கொண்டிருக்கும்.

indias new hallmarking 9 carat gold jewellery
ஓடிசாவில் பூமிக்கு அடியில் 10-20 டன் தங்கம் கண்டுபிடிப்பு.. இந்திய புவியியல் ஆய்வு மையம் மதிப்பீடு!

24 கேரட் & 9 கேரட் தங்கம் வேறுபாடு

24K தங்கம் என்பது, 99.9 சதவீத தூய தங்கமாக உள்ளது. அதாவது இதில் வேறு எந்த உலோகங்களும் இல்லை. இவை, தங்க நாணயங்கள், கட்டிகள் மற்றும் முதலீட்டிற்குப் பயன்படுத்தக்கூடிய எளிய நகைகளில் காணமுடியும். எனினும், நம்மில் பெரும்பாலோர் 22 காரட் தங்க நகைகளையே விரும்புகின்றனர். இதில், 91.6 சதவீத தங்கம் உள்ளது. உதாரணத்துக்கு சுத்தமான அதாவது 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1 லட்சம் என்றால், 9 காரட் தங்கம் 10 கிராம் ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.37 ஆயிரம் அளவில் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

indias new hallmarking 9 carat gold jewellery
தங்கம்pt desk

இதையடுத்து, 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கிடைப்பதால் மக்கள் குறைந்த விலையிலும் தங்க நகைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்முலம், நகரப்பகுதிகளைவிட தங்கம் வாங்குவது குறைவாக இருக்கும் கிராமப் பகுதிகளிலும் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 9 காரட் தங்கம் விலை, 22 காரட் தங்கம் விலையைக் காட்டிலும் மிகவும் குறைவு என்பதால் அதிகமானோர் இதனை வாங்க முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 9 காரட் தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்கு வருவது, அதன் வாங்கும் அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

indias new hallmarking 9 carat gold jewellery
ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள்... அப்ப இனி தங்கம்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com