6 ஆண்டுகளில் ரூ.53,000 கோடி இழப்பு.. இந்தியாவில் சைபர் குற்ற மோசடிகள் அதிகரிப்பு!
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் மோசடி வழக்குகளில் 53 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியர்கள் இழந்துள்ளதாக இந்திய சைபர் கிரைம் தொடர்பான தரவின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் மோசடி வழக்குகளில் 53 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியர்கள் இழந்துள்ளதாக இந்திய சைபர் கிரைம் தொடர்பான தரவின் வாயிலாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் முதலீடு என்ற பெயரில் மோசடி, டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் முறைகேடுகள், வங்கி நிதி முறைகேடுகள் போன்றவற்றின் மூலம் சைபர் குற்றங்கள் நடப்பது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 71ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில்19,812 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மக்கள் 3,203கோடி ரூபாயை மோசடி மூலம் பறிகொடுத்துள்ளனர். அதற்கு அடுத்தாக கர்நாடகா மக்கள் 2,413 கோடி ரூபாயை சைபர் குற்றங்களில் இழந்துள்ளனர். மூன்றாவதாக தமிழகத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 290 சைபர் குற்ற மோசடிகளில் 1,897 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர்.

