தமிழக மீனவர்கள் கைதுpt desk
தமிழ்நாடு
தொடரும் நடவடிக்கை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: அ.ஆனந்தன்
இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
fishermanfile
விசாரணைக்குப் பின்னர் இரண்டு படகுகளையும் அதிலிருந்து 21 மீனவர்களையும் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றது என தகவல் வெளியாகி உள்ளது.