உதய்பூர்
உதய்பூர்முகநூல்

ரஷ்ய மனைவியுடன் இந்தியா வந்த யூடியூபர்; நடந்த கசப்பான நிகழ்வு..!

இந்தியாவை சேர்ந்த யூடியூபர் ராஜஸ்தானுக்கு தனது ரஷ்ய மனைவி மற்றும் குழந்தையுடன் பயண மேற்கொண்டிருந்தார். அங்கு அடையாளம் தெரியாத நபரால் தனது மனைவிக்கு ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து தனது யுடியூப் பக்கத்தில் மிகுந்த கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
Published on

இந்தியாவை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மிதிலேஷ். இவர் ரஷ்யாவை சேர்ந்த லிசா என்ற பெண்ணை மணந்து கொண்டநிலையில், இவர்களுக்கு 2 வயது மகனும் உள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு, தனது மனைவி லிசா மற்றும் இரண்டு வயது குழந்தையுடன், உதய்ப்பூரில் உள்ள City Palace க்கு சென்றிருந்தார்.

தவறான கருத்தை தெரிவித்த நபர்
தவறான கருத்தை தெரிவித்த நபர்

அப்போது, அடையாள தெரியாத ஒரு நபர் , மிதேஷின் மனைவி குறித்து அவதூறான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மிதிலேஷ், City Palace ஐ வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கேமராவை உடனே, அந்த அடையாள தெரியாத நபரை நோக்கி திருப்பி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த விரிவான விடியோவை சில நாட்களுக்கு பிறகு தனது யூடியூபில் வெளியிட்டுள்ள மிதிலேஷ், இந்தியாவில் பெண்களின் பாதுப்பின் நிலை குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கியுள்ள அவர், “ உதய்பூரில் உள்ள City Palaceக்கு சென்ற போது ஒரு ஆண் எனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையை பின் தொடர்ந்தார். அப்போது, எனது மனைவியை நோக்கி, “ 6000 ரூபாயா? ” என்று கேட்டார்.. உடனே கோபமடைந்த நான்,” யாரை பார்த்து 6000 ரூபாயா என்று கேட்கிறாய் . என் மனைவி ரஷ்யன் என்பதால் நீங்கள் முட்டாள்தனமான எந்த விஷயங்களை வேண்டுமானாலும் சொல்வீர்களா?’ ” என்று கேட்டேன். ” என்றார்.

இதனையடுத்து, அங்கு இருந்த பாதுகாவலரிடம் மிதிலேஷ் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த பாதுகாவலர், தவறாக பேசிய நபரை கண்டிப்பதற்கு பதிலாக, இந்த விஷயத்தை கைவிடுமாறு மிதிலேஷிடம் தெரிவித்துள்ளனர்.

உதய்பூர்
இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன்!

தொடர்ந்து இதுகுறித்து தெரிவித்த மிதிலேஷ், “ நான் மிகவும் கோபமாக இருந்தேன். நான் என் மனைவியுடன் இருந்தேன். மக்கள் எப்படி இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள்?.. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும், வெட்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதற்கான நான் ஆசையாக என் மனைவியை அழைத்து வந்தேன்.. ஆனால், இது போல சம்பவங்கள் நடந்தால் நான் என்ன செய்வது. ” என்று பெண்கள் பாதுகாப்பு குறித்த விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த சம்பவம் குறித்தான வீடியோவை மிதிலேஷ் தனது யூடியூபில் பதிவிட்டுள்ளநிலையில்,இது இணையதளத்தில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com