சுதந்திரம் கிடைத்தபோது, இந்தியாவில் இருந்து வேறு நாடுகளில் குடியமர்ந்தவர்கள், அங்கு மத ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளானதாக கூறப்பட்டது. அவர்கள் இந்தியாவில் குடியேற விரும்பினால், குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்களும் உள்ளது. தமிழ்நாட்டில் இச்சட்டம் அமலாவதற்கு அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாஜக இச்சட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளது
இதுகுறித்து மேலும் அறிய - CAA | குடியுரிமை திருத்தச் சட்டம் | எதிர்ப்பு கிளம்பியது ஏன்? சட்டம் சொல்வது என்ன?
இந்நிலையில், 300 பேருக்கு தற்போது இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதன் அடையாளமாக, 14 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா அதற்கான சான்றுகளை வழங்கினார்.
இந்திய பதிவுத்துறை தலைவர் உள்ளிட்டோர், குடியுரிமை வழங்களின் போது உடனிருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்று வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.