பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்!
போர் விதியை மீறி பாகிஸ்தான் ஒரு சில இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு விடியவிடிய பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், “ சிந்தூர் நடவடிக்கை : பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 08 மற்றும் 09, 2025 இரவில் மேற்கு எல்லை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த விதிமுறையை மீறி (CFV) ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டது.
ஆனால், அவற்றின் ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் CFV களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. #இந்திய இராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. மேலும், பாகிஸ்தானின் அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்தால் பதிலளிக்கப்படும்.” என்று பதிவிட்டுள்ளது.