\
india post gds recruitment 2026 applications released
Model Imagchatgpt

வெறும் 10ஆம் வகுப்பு போதும்.. சம்பளம் ரூ.29,000.. போஸ்ட் ஆபீஸில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

வேலை இல்லைனு கவலையா, வெறும் 10ஆவது படிச்சிருந்த போதும்.. 23,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
Published on

மத்திய அரசின் இந்திய அஞ்சல் துறையானது, புதிதாக வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) மற்றும் தக் சேவக் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன்மூலம் கிட்டத்தட்ட 23,757 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கான செயல்முறையில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 19க்குள் பதிவு செய்துகொண்டு செப்டம்பர் 21க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Model image
Model imagechatgpt

கிளை அஞ்சல் அதிகாரி பதவிக்கு 12,000 முதல் ரூபாய் வரையிலும், உதவி கிளை அஞ்சல் அதிகாரி பதவிக்கு10,000 முதல் 24,470 ரூபாய் வரையிலும் மாதச் சம்பளம் வழங்கப்படும். காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். அனைத்துப் பெண்கள், பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), மாற்றுத்திறனாளிகள் (PwBD) மற்றும் திருநங்கைகள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் எழுத்துத் தேர்வின்றித் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தத் தொடரையும் படிக்க்: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 6 | தனி மருத்துவர் கிளினிக்கை மூடக் காரணம்!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com