உலக அளவில் புலிகளின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த இந்தியா

உலக அளவில் புலிகளின் எண்ணிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?
புலிகள்
புலிகள்google

உலகலாவிய அளவில் புலிகளின் எண்ணிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

இந்திய தேசிய விலங்கு புலி. அப்படி இருக்கையில் இந்தியாவில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் அல்லவா?ஆனல் 1960 காலகட்டத்தில் புலித்தோலுக்காகவும், வீரத்திற்காகவும் இந்தியாவில் புலிகள் அதிகமாக வேட்டையாடப்பட்டது. இதனால் புலிகளின் எண்னிக்கை கணிசமான அளவில் குறைந்தது. புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்பொருட்டு 1968 ல் புலிகள் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. அதன் பிறகு வனவிலங்கு பாதுகாப்பு சட்டமானது 1973ம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.

புலிகள்
ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை நிறுவ திட்டமிடுகிறதா? - பின்னணி என்ன?

இதனால் புலிகளைப்பாதுகாப்பதற்கென்று இந்தியா முழுவதும் சரணாலயங்கள் அமைக்கப்பட்டது. இதன் எண்ணிக்கையானது தற்பொழுது 54 ஆக இருக்கிறது.

அதன்பிறகு 2006ம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கையானது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2006ல் எடுக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கையையானது 1,411 ஆக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து 2022ல் புலிகளின் எண்னிக்கையானது 3167 ஆக அதிகரித்தது.

அதே சமயத்தில் ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

google

அதன்படி லாவொஸில் 2,வியட்னாமில் 5, மியான்மரில் 22 சீனாவில் 55 பூட்டானில் 103 பேங்ஹாக் 106 மலேசியா 150 தாய்லாந்தில் 189 நேபால் 355 இந்தோநேஷியா 450 ரஷ்யா 520 என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com