ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை நிறுவ திட்டமிடுகிறதா? - பின்னணி என்ன?

”முதல் படி ஏறுவதுதான் கடினம், ஏறிவிட்டால் கடகடவென மேலே வந்திடலாம்” என்று அந்தந்த துறையின்அனுபவசாலிகள் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
அணு உலை
அணு உலைPT

”முதல் படி ஏறுவதுதான் கடினம், ஏறிவிட்டால் கடகடவென மேலே வந்திடலாம்” என்று அந்தந்த துறையின்அனுபவசாலிகள் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல்தான் விண்வெளிதுறையும். சமீபகாலமாக விண்வெளி துறையில் உலகநாடுகள் போட்டி போட்டுக்கொண்டு, சாதித்து வருகின்றன.

இதன்படி இந்தியாவின் இஸ்ரோவும் சந்திரயான்3 வெற்றியைத்தொடர்ந்து சந்திரயான் 4 விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் திட்டம் சந்திரனிலிருந்து தனிமங்களை பூமிக்கு எடுத்து வந்து ஆராய்சி செய்வது. இது ஒருபுறம் இருக்க....

இதற்கும் முன்னோடியாக, ரஷ்யாவும் சீனாவும் இணைந்து நிலவில் அணு தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது. இது குறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி த.வி வெங்கடேஷ்வரன் பேசும் பொழுது,

த.வி.வெங்கடேசன்
த.வி.வெங்கடேசன்

”ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸின் தலைமைச் செயல் அதிகாரியான யூரிபோரிசொவ், மாணவர்களிடையே உரையாற்றும் பொழுது 2023ம் ஆண்டிலிருந்து 2025க்குள் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

நிலவில் எதிர்காலத்தில் மக்கள் குடியேறினாலோ அல்லது அங்கு சென்று தாதுப்பொருட்கள் தனிமங்கள் எடுப்பதற்கு முயற்சி செய்தாலோ ஆற்றல் தேவைப்படும். அந்த ஆற்றலை சூரிய ஒளியிலிருந்து மட்டும் எடுப்பது சாத்தியமாகாது ஆகவே விண்வெளியில் அணு தொழிற்சாலை தேவைப்படும் என்பதற்காக ரஷ்யா சீனாவுடன் பேசிவருவதாகவும், நியூக்ளியஸ் ஸ்பேஸ் டெக்னாலஜி தகவல்களை அவர்களுடன் ஷேர் பண்ணிக்கொள்வதாகவும் மாணவர்களிடையே பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், அணு உலை திட்டமானது தானியங்கி முறையில் மனிதர்கள் இல்லாமல் ரோபோக்களை கொண்டு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கான்கிரீட் ப்ராஜெக்ட் என்று பெயர் அதாவது, இது ஒரு உறுதிப்பட்ட திட்டமல்ல ஒரு யோசனையில் இருக்கின்ற ஒரு திட்டம்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com