I-N-D-I-A கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? திட்டவட்டமாக நிலைப்பாட்டை தெரிவித்த மம்தா, கார்கே!

”நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகே I-N-D-I-A’ கூட்டணியின் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும்” என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
I-N-D-I-A  கூட்டணி
I-N-D-I-A கூட்டணிtwitter

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.

'INDIA' கூட்டணி பெயருக்கு எதிர்ப்பு
'INDIA' கூட்டணி பெயருக்கு எதிர்ப்பு

இதற்குப் பின் போபாலில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே 5 (மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா) மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சி தனது முழுக் கவனத்தையும் அங்கு திருப்பியது. இதனால், ’I-N-D-I-A’ கூட்டணிக்குள் சில சலசலப்புகள் எழுந்தன.

இதையும் படிக்க: ஜெய்ப்பூர்: ரஷ்ய பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பெட்ரோல் பங்க் ஊழியர்மீது வழக்குப்பதிவு!

’I-N-D-I-A’ கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சிக்கு மத்தியப் பிரதேசத்தில் சீட் ஒதுக்க, காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததாக அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்புடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, இது பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.

I-N-D-I-A கூட்டணி
I-N-D-I-A கூட்டணிட்விட்டர்

இதனால், I-N-D-I-A கூட்டணிக்குள் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியின் கனவு தவிடுபொடியானது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கடந்த 2 மாதங்களாக I-N-D-I-A கூட்டணியின் கூட்டம் நடைபெறாத நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த நிலையில், 4வது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.19) டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: தமிழ்நாடு அணி: ரஞ்சி கிரிக்கெட் தொடருக்கு சாய் கிஷோர் கேப்டன்.. அபராஜித் இல்லாததால் விமர்சனம்!

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் தொகுதிப் பங்கீடு, பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து I-N-D-I-A கூட்டணித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

Mallikarjun Kharge
Mallikarjun Khargept desk

இந்திய வரலாற்றில் 141 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். இது மிகவும் தவறான அணுகுமுறை. இதற்கு எதிராக I-N-D-I-A கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இதையும் படிக்க: தொடரும் சஸ்பெண்ட் நடவடிக்கை: இன்று 49 எம்.பிக்கள்.. இதுவரை 141 பேர்; விவாதத்தில் முக்கிய மசோதாக்கள்!

பிரதமர் வேட்பாளர் யார் எனக் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”எங்களின் இலக்கு வெற்றிதான்; வெற்றிக்குப் பிறகுதான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்ற பின், எங்களிடம் போதுமான எம்பிக்கள் இருப்பார்கள். அதன்பின் ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ”நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு I-N-D-I-A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படும்” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிங்கப்பூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று - அச்சத்தை ஏற்படுத்திய டிசம்பர் முதல் வாரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com