ஈரான் சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்கள்.. தூதரகம் மூலம் மீட்க இந்திய அரசு நடவடிக்கை!

ஈரான் நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஏரிஸ் கப்பல்
ஏரிஸ் கப்பல்ட்விட்டர்

கணபதி சுப்ரமணியம்

ஈரான் நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் நாட்டு வெளியுறவுதுறை அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடி அனுமதி பெற்றுள்ளார். ஏரிஸ் என அழைக்கப்படும் சரக்கு கப்பலில் சிக்கி உள்ள 17 இந்தியர்களை மீட்க இது முதல் கட்ட நடவடிக்கையாக கருதப்படுகிறது.

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஹுசைன் அமீர்அப்துல்லாவை தொடர்பு கொண்டு பேசி இந்திய தூதரக அதிகாரிகள் ஏரிஸ் கப்பலின் 17 இந்திய ஊழியர்களை சந்திக்க அனுமதி பெற்றுள்ளார்.

விரைவில் இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என உசேன் அமீர் அப்துல்லா உறுதிமொழி அளித்துள்ளார். இஸ்ரேல் நாட்டு தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்புடையதாக கருதப்படும் ஏரிஸ் கப்பலை ஈரான் நாட்டு ப் படைகள் சிறைபிடித்துள்ளன. இந்தக் கப்பல் தற்போது ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது எனவும் அன்புள்ள துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடும் எனவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: The real kerala story| சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க 34 கோடி நிதி திரட்டிய மக்கள்

ஏரிஸ் கப்பல்
இஸ்ரேல் மீது தாக்குதலா.. ஈரானின் திட்டம் என்ன.. இந்தியர்களுக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு!

ஹார்முஸ் ஜலசந்தி அருகே பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஈரானிய படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கி, ஏரிஸ் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் தாக்கி பல மூத்த அதிகாரிகளை கொன்றதைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்கள் மூலம் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவிவரும் சூழலில், இஸ்ரேல் நாட்டுக்கு தொடர்புடையதாக கருதப்படும் ஏரிஸ் கப்பலை ஈரானிய படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கப்பலில் உள்ள 25 ஊழியர்களின், 17 ஊழியர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் கேட்டு உள்ளது. இவர்களை விரைவாக மீட்க இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கப்பலில் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, பாகிஸ்தான், மற்றும் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த ஊழியர்களும் உள்ளனர். ஏரிஸ் கப்பலை இயக்கும் மெடிட்டரேணியன் ஷிப்பிங் நிறுவனம் ஈரான் அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு ஊழியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏரிஸ் கப்பல் போர்ச்சுகிய நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் பதட்டத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகளில் எடுத்து வருகிறது என வெளியுறவுதுறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!

ஏரிஸ் கப்பல்
இஸ்ரேல்-ஈரான் மோதல்| உலகப்போருக்கு வாய்ப்பு.. டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com