"களவாணி" பட பாணியில் காருக்குள் வைத்து காதலிக்குத் தாலி கட்டிய காதலன்-அடுத்தடுத்து நடந்த போராட்டம்!

கர்நாடகாவில் திரைப்பட பாணியில் ஓடும் காரில் வைத்து காதலிக்குத் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவபிரசாத் - அமிர்தா
சிவபிரசாத் - அமிர்தாpt wep

நடிகர் விமல், நடிகை ஓவியா நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தில் கதாநாயகியுடன் தப்பிச் செல்லும் போது, காரில் வைத்து கதாநாயகிக்குத் தாலி கட்டுவது போன்ற காட்சிகள் அமைத்திருக்கும். இதே போன்ற நிகழ்வு நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.

கர்நாடகாவில் மாநிலம், கொப்பாலைச் சேர்ந்தவர் அமிர்தா [23]. பல்லாரி சிறுகுப்பா தெக்கலகோட்டில் வசிப்பவர் சிவபிரசாத் [25]. இவர்கள் இருவருக்கும் சமூக வலைத்தளம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுப் பேசி வந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறி,காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் சிவபிரசாத் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமிர்தா வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அமிர்தாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

சிவபிரசாத் - அமிர்தா
அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. அமெரிக்க அதிபர் கென்னடியை கொன்றது யார்? நீளும் 60 ஆண்டு மர்மம்!

இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தா வீட்டை விட்டு வெளியேறி சிறுகுப்பாவிற்கு சென்றுள்ளார். அங்குக் காத்திருந்த சிவபிரசாத், அமிர்தாவும் காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். காரில் சென்று கொண்டிருக்கும் போதே இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் அமிர்தா கழுத்தில் சிவபிரசாத் தாலி காட்டியுள்ளார்.

ஓடும் காரில் வைத்து காதலிக்குத் தாலி கட்டிய இளைஞர்
ஓடும் காரில் வைத்து காதலிக்குத் தாலி கட்டிய இளைஞர்

இதனைத்தொடர்ந்து, காதல் கோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு நள்ளிரவு நேரத்தில் தெக்கலகோட் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரவு நேரம் என்பதால், அமிர்தாவைப் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு, போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

சிவபிரசாத் - அமிர்தா
பழமையான வட்டெழுத்துகளை மீட்டெடுக்கும் பயணம்: செங்கல்பட்டு சிறுமியின் அசாத்திய முயற்சி!

இதனையறிந்த அமிர்தாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்குச் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற  போலீசார்,  அவர்களைச் சந்தனம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசாரின் கண் முன்னே அமிர்தாவை அவரது பெற்றோரும், குடும்பத்தினரும் வலுக்கட்டாயமாக, காரில் ஏற்ற முயன்றுள்ளனர். 

காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற உறவினர்கள்
காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற உறவினர்கள்

ஆனால் அமிர்தா பெற்றோருடன் செல்ல மாட்டேன். காதல் கணவருடன் தான் வாழ்வேன் எனக் கூறியதால்  அமிர்தாவை அங்கேயே விட்டுவிட்டு கண்ணீருடன் பெற்றோர் புறப்பட்டுச் சென்றனர். இதனைப் பார்த்த காதல் ஜோடி கண்கலங்கி நின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com