பேய் திருமணமா? என்னப்பா இது புது சடங்காக இருக்கு!

30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த தனது மகளுக்கு , இறந்த மணமகனை திருமணம் செய்து வைத்த வினோத சடங்குமுறை ஒன்று தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாஃபேஸ்புக்

30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த தனது மகளுக்கு , இறந்த மணமகனை திருமணம் செய்து வைத்த வினோத சடங்குமுறை ஒன்று தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் புதூர் பகுதியில், துளு பேசும் தம்பதியின் மகள் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். ஆகவே, இறந்த தங்களின் மகளுக்கு திருமணமாகாத நிலையில், அவருக்கு திருமணம் செய்து வைக்க இத்தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தங்களின் இறந்த மகளுக்கு இறந்த மணமகன் வரன் வேண்டி செய்தி தாள் ஒன்றில், விளம்பரம் செய்துள்ளனர்.

இதனைப்பார்த்த மணமகன் குடும்பத்தினர் இவர்களை அணுகவே மற்ற திருமணங்களைபோல நிச்சயதார்த்தம் உள்ளிட்ட அனைத்து சடங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக மணப்பெண்ணுக்கு தேவையான பட்டுப்புடவையும், மணமகனுக்கு தேவையான வேட்டியும் எடுக்கப்பட்டு அதன் மீது மாங்கல்யமும் வைக்கப்பட்டு இறந்த இருவருக்கும் திருமணம் நிகழ்த்தப்பட்டது.

இதன்பிறகு திருமண சடங்கும், திருமண விருந்தும் உறவினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்னது இறந்தவர்களுக்கு திருமணமா? என்று அனைத்து தரப்பினரிடையே இந்த நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குலே திருமணம்

அதேநேரத்தில் இது கர்நாடக கடலோர மாவட்டங்களில் வசித்து வரும் துளு மொழி பேசும் மக்க்களின் வினோத சடங்கு என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகா
தலைப்புச் செய்திகள்|ஆர்சிபி அபார வெற்றி.. வெளியேறியது சிஎஸ்கே To தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை!

இதன்படி, இறந்த திருமணமாகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கப்பட்டு , பொருத்தம் உண்டானால் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமாம். இது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கம் என்று கூறுகிறார்கள். இதன் மூலம், இறந்து தங்களின் ஆசை நிறைவேறாமல் அலையும் ஆத்மாக்களின் ஆன்மா சாந்தி அடையும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. இதற்கு ’குலே(பேய்) திருமணம்’ என்று பெயர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com