இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

தலைப்புச் செய்திகள்|ஆர்சிபி அபார வெற்றி.. வெளியேறியது சிஎஸ்கே To தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ஆர்சிபி அணியின் அதிரடி வெற்றி முதல் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
  • ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. பெங்களூரு அணியுடனான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

  • தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு. மேலும், 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • தமிழகம் முழுவதும் பரவலாக மழைப்பெய்ததால், மண் சரிவு ஏற்பட்டு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • உதகை, கொடைக்கானல், ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என கனமழை எச்சரிக்கையை சுட்டிக்காட்டி பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

  • நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 47 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது, வரும் 21 ஆம்தேதி வரை வடமாநிலங்களில் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • கோவை அன்னூர் பாரதிய ஜனதா நிர்வாகி வீட்டில் நிலம் வாங்க வைத்திருந்த ஒருகோடி ரூபாய் பணத்தை பீரோவை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  • ஐந்தாம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில், பீகார், ஒடிசா உட்பட 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

  • தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வாதி மலிவால் அளித்த புகாரில் கைது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவல்.

  • பாஜக தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.பாஜக விரும்பும் யாரையும் சிறைக்கு அனுப்பட்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சவால்.

  • கிர்கிஸ்தானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com