IIT-ல் Shock! இனி Campus Recruitment இல்லையா? Oracle உட்பட 22 நிறுவனங்களுக்கு தடை!
அனைத்து ஐஐடிகளின் AIPC, பட்டதாரிகளுக்கு வழங்கிய வேலைவாய்ப்பு உறுதிமொழிகளை நிறைவேற்றாத 22 நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. Oracle உட்பட சில start-up களும் இதில் உள்ளன. அடுத்த இரண்டு placement seasons-ல் இந்நிறுவனங்களுக்கு campus recruitment தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
ஐஐடிகளின் வேலைவாய்ப்பு குழுவான All IITs Placement Committee (AIPC), மாணவர்களுக்கு வழங்கிய வேலைவாய்ப்பு உறுதிமொழிகளை நிறைவேற்றாததாகக் கூறப்படும் 22 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு placement seasons-ல் இந்த நிறுவனங்கள் ஐஐடி வளாகங்களில் campus recruitment நடத்த அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய சில நிறுவனங்கள், பின்னர் அந்த வேலைகளை வழங்காமல் பின்வாங்கியதாகவும், உறுதியளித்த எண்ணிக்கையில் மாணவர்களை பணியில் சேர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்ட மாணவர்களை செப்டம்பர் 15-க்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையால் 23 ஐஐடிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக placement குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. சில நிறுவனங்கள் தலா 10 முதல் 15 வேலைவாய்ப்புகளை திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் Oracle உள்ளிட்ட நிறுவனங்களும் சில start-up களும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக Oracle நிறுவனம் சுமார் 40 ஐஐடி வேலைவாய்ப்பு ஆஃபர்களை நிறைவேற்றவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தத் தடை குறித்து, அதாவது நிறுவனங்களை blacklist செய்வதாக குறிப்பிடவில்லை AIPC, அதற்கு பதிலாக non-cooperation என அழைக்கப்படுகிறது. அதாவது, அடுத்த இரண்டு placement seasons-ல் ஐஐடியில் இந்த 22 நிறுவனங்கள் campus recruitment இல் ஈடுபடமுடியாது.
கடந்த 2025-ம் ஆண்டிலும் இதுபோன்ற பிரச்சினையில் சுமார் 10 முதல் 11 நிறுவனங்களுக்கு எதிராக தனித்தனி ஐஐடிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 22 நிறுவனங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த முறையில் நடவடிக்கை எடுக்க AIPC முடிவு செய்துள்ளது.
வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படுவது மாணவர்களுக்கு வெறும் வேலை இழப்பு மட்டுமல்ல. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில், ஐஐடி placement அதிகாரிகள் தற்போது தங்கள் வளாகங்களில் ஆட்சேர்ப்பு நடத்தும் பிற நிறுவனங்களுக்கு மாணவர்களின் resume களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

