ஹைதராபாத் பல்கலைக்கழகம்: சட்னியில் நீச்சலடித்த எலி... வீடியோ வைரல்..

ஹைதராபாத் பல்கலைக்கழகமொன்றில், விடுதியில் தயாரிக்கப்பட்ட சட்னியில் எலி நீந்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்னியில் விழுந்த எலி
சட்னியில் விழுந்த எலிpt web

ஹைதராபாத் சுல்தான்பூரில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவிற்காக சட்னி தயாரிக்கப்பட்ட நிலையில், அந்த மிகப்பெரிய பாத்திரத்தில் எலி நீந்தும் வீடியோ வெளியாகியுள்ளது. மாணவர்களில் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாத்திரம் மூடப்படாததாலேயே சட்னியில் எலி விழுந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜூலை 8-ஆம் தேதி இரவு 10.40 மணியளவில், இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போதுவரை 68 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர். இது விடுதியில் தயாரிக்கப்படும் உணவின் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்னியில் விழுந்த எலி
பெங்களூரு: பள்ளி வாகனங்களுக்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனை; 23 ஓட்டுநர்கள் மது அருந்தி இருந்தது அம்பலம்

சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து பணிகளில் அலட்சியமாக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். மேலும், முதலில் உணவில் பூச்சிகள்தான் இருந்தன. இப்போது எலிகள் இருக்கின்றன எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சட்னியில் விழுந்த எலி
கேரளா: மூளையை தாக்கும் அமீபாவை தொடர்ந்து வேகமாக பரவி வரும் காலரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com