பக்கத்து வீட்டுக்காரரை கடிக்க முயன்ற வளர்ப்பு நாய்; உரிமையாளரை கொடூரமாக தாக்கிய நபர்கள்! #ViralVideo

வளர்ப்பு நாய் ஒன்று பக்கத்து வீட்டுக்காரரைத் தாக்க முயன்ற விவகாரத்தில், நாயின் உரிமையாளரை அடித்துத் துவைத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
video image
video imagetwitter

சமீபகாலமாக வீட்டு விலங்குகள் மூலம் பிற மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சென்னை பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வளர்ப்பு நாய்கள் இரண்டு கடித்துக் குதறியது. மேலும், சிறுமியைக் காப்பாற்ற சென்ற அவரது தாயையும் அந்த நாய்கள் கடித்ததுக் குதறின. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னையின் வேறோர் இடத்தில் இதுபோன்ற அடுத்த சம்பவம் நிகழ்ந்தேறியது. இப்படி, நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் வளர்ப்பு நாய் ஒன்று, பலரையும் கடித்த விவகாரத்தில், நாய் உரிமையாளரையும் அவரது மனைவியையும் அடித்து துவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத் மதுரா நகரில் உள்ள ரஹ்மத் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீநாத். இவர், ஹஸ்கி என்ற நாயை வளர்த்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தனஞ்சய்.

இதையும் படிக்க: ”ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது” - நிதி நிறுவனங்களுக்கு RBI அதிரடி உத்தரவு

video image
“நாய் கடிச்ச அந்தக் குழந்தைய தூக்கினாகூட அவருக்கு வலி வந்துடுது...” - வேதனையுடன் கூறிய ஆணையர்!

இந்த நிலையில், வளர்ப்பு நாயை அவிழ்த்து விடுவது தொடர்பாக மேற்கண்ட இரு குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய வளர்ப்பு நடைப்பயிற்சிக்காக ஸ்ரீநாத் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அண்டை வீட்டாரை அந்த நாய் கடிக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தனஞ்செய் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இந்த ஆத்திரத்தால் தனஞ்செய் குடும்பத்தினர் ஸ்ரீநாத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து தடுக்க ஓடிய ஸ்ரீநாத்தின் மனைவிக்கும் அடி விழுந்ததுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே 8ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இவ்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக, இந்தச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். மேலும், வளர்ப்பு நாயும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாய்க்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: லண்டன்: முதலையிடம் போராடி சகோதரியை காப்பாற்றிய பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சர்யம்...!

video image
சென்னை | சிறுமியை கொடூரமாக கடித்த நாய்கள்... நடுக்கத்தோடு பேசிய சிறுமியின் தந்தை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com