“நாய் கடிச்ச அந்தக் குழந்தைய தூக்கினாகூட அவருக்கு வலி வந்துடுது...” - வேதனையுடன் கூறிய ஆணையர்!

சென்னையில் நாய் கடித்ததில், தலையில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று மதியம் 2 மணி அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெ.ராதாகிருஷ்ணன்
ஜெ.ராதாகிருஷ்ணன்புதிய தலைமுறை

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் ரகு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷா ஆகியோர், பூங்காவில் உள்ள ஒரு சிறு அறையில் வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பூங்காவிற்கு அழைத்து வரப்பட்ட இரண்டு நாய்கள் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளன. குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் சோனியாவையும் கடித்ததுக் குதறியுள்ளது. இதை பார்த்த நாயின் உரிமையாளர் அமைதியாக இருந்துள்ளார்.

இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தை, அருகில் இருந்தவர்களின் உதவியால் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாயின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடைய நாயுடன் தற்போது அவர் மதுரைக்கு சென்றிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சிறுமிக்கு, இன்று மதியம் 2 மணி அளவில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை | சிறுமியை கொடூரமாக கடித்த நாய்கள்... நடுக்கத்தோடு பேசிய சிறுமியின் தந்தை!

இந்த அறுவை சிகிச்சை மிகுந்த கவனமாக செய்யப்பட வேண்டும் என்பதால், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரேபிஸ் போன்ற எந்தவித தொற்றும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக தொடர் சிகிச்சைகளும் சிறுமிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பேசியுள்ளார். அதில், “நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். தொடர்ந்து நடக்கும் நாய்க்கடி சம்பவங்களை பொறுத்தவரை விலங்குகள் நலத்துறை விதிகள் எங்களுக்கு சவாலாக உள்ளது.

ஜெ.ராதாகிருஷ்ணன்
சென்னை | சிறுமியை கொடூரமாக கடித்த நாய்கள்... நடுக்கத்தோடு பேசிய சிறுமியின் தந்தை!

மேலும், நகர்ப்புற மேம்பாட்டு துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற விழிப்புணவு நாய்கள் வளர்ப்பவர்களுக்கு இல்லை. நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம்.

பிராணிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் உண்மை. நாய்களை குறை சொல்வதை விட வளர்ப்பவர்கள் பாதுகாப்பாக அவற்றை வைத்திருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

சென்னை சம்பவத்தை பொறுத்தவரை, நாய்க்கடி ஏற்பட்ட 5 வயது குழந்தைக்கு ரேபிஸ் நோய் தொற்று உள்ளது என்பது தவறான தகவல். ரேபிஸை தடுக்க தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இன்று மதியம் 2 மணி அளவில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையை தூக்கி வைத்தால்கூட வலி ஏற்பட்டு அழுகிறார். ஆகவே வலி நிவாரண சிகிச்சைகளும் அவருக்கு தரப்படுகின்றன. கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மன ரீதியான பாதிப்பு அவருக்கும் இருக்கலாம், அதற்கும் மருத்துவர்கள் மூலம் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாய் கடிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பின் நாய் வளர்ப்பு செய்பவர்கள் அதற்கு பதிவு செய்வது அதிகரித்துள்ளது, ஆன்லைன் மூலம் சுலபமாக பதிவு செய்யமுடியும், செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் அவற்றை பதிவு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com