பல் சிகிச்சையின் போது துண்டான இளம்பெண்ணின் உதடு! ஹைதராபாத் பல் மருத்துவமனை மீது மற்றொரு புகார்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பல் அறுவைசிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்தநிலையில், தற்போது அதே மருத்துவமனையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளதாக புகார்.
ஹைதராபாத்
ஹைதராபாத் முகநூல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பல் அறுவைசிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்தநிலையில், தற்போது அதே மருத்துவமனையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, ஹைதராபாத்தில், ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில், அழகான புன்னகை பெற வேண்டும் என்பதற்காக 28 வயது இளைஞர் ஒருவர் ‘புன்னகை சிகிச்சை’ மேற்கொண்டார். சிகிச்சை பெற்ற இளைஞர் மயக்க ஊசியின் தாக்கத்தால் உயிரழந்ததாக தகவல் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து அதே பல் மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற பெண் ஒருவருக்கு திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் தோழி ஒருவர், தனது x வலைதளப்பக்கத்தில் தன் தோழிக்கு நடந்த சம்பவத்தினை பகிர்ந்துள்ளார்.

அதில். ”ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சைப் பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைப்பெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.

இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தி அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை பரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பல் அறுவை சிகிச்சை தொடர்பான, தொடர் சம்பவங்கள் வெளியாகி வருவது, மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஹைதராபாத்
திருமணத்திற்காக புன்னகை சிகிச்சை! பற்களை சீராக்க நினைத்த இளைஞரின் உயிர் மயக்க ஊசியால் பறிபோன சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com