திருமணத்திற்காக புன்னகை சிகிச்சை! பற்களை சீராக்க நினைத்த இளைஞரின் உயிர் மயக்க ஊசியால் பறிபோன சோகம்!

ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு பற்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள பல் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட மயக்கமருந்தினால் அவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 லஷ்மிநாராயணன்
லஷ்மிநாராயணன்முகநூல்

ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது திருமணத்தை முன்னிட்டு பற்களை ஒழுங்குப்படுத்திக்கொள்ள பல் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு சிகிச்சைஅவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட மயக்கமருந்தினால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் லஷ்மிநாராயணன் 28 வயது. இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள் நிலையில் அதற்கான வேலைகளை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த மாதம் திருமணமும் நடைபெற இருந்தது. திருமணத்தை முன்னிட்டு புன்னகை மேம்பாடு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அதாவது, பற்களை நேர் வரிசையில் சீராக வைத்தால் முகம் இன்னும் சிரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். அதனால் தான் இதனை புன்னகை சிகிச்சை என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில், திருமணத்திற்காக தனது பல்வரிசை அழகாக இருக்கவேண்டும் என நினைத்து, அருகில் ஜூப்ளி ஹில்ஸில் இருக்கும் பிரபல பல் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு இவரது பற்களை பரிசோதித்த பல் மருத்துவர்கள் அதனை சீராக அமைப்பதற்காக ஆபரேஷன் செய்ய திட்டமிட்டுள்ளனர். சிகிச்சைகு முன்னதாக அவரது தாடையில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தானது அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தவே அவர் சுய நினைவிழந்து இருக்கிறார்.

நினைவு திரும்பவும் வராததால் மருத்துவர்கள் லஷ்மிநாராயணனை மற்றொரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 லஷ்மிநாராயணன்
கொரோனாவிற்கு பிறகு அதிகரித்த நீண்ட கால ’நுரையீரல்’ பிரச்சனைகள்; ஷாக் கொடுக்கும் ஆய்வு முடிவுகள்!

இந்நிலையில் லஷ்மிநாராயணனின் இறப்பிற்கு பல்மருத்துவரின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறி உறவினர்கள் போலிசில் புகார் அளித்தனர்.

மேலும், இது குறித்து உயிரிழந்த இளைஞரின் தந்தை தெரிவிக்கையில், ”அவருக்கு உடல்நல பிரச்னை எதுவும் இல்லை. என் மகனின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து ஜூப்லி ஹில்ஸ் காவல்நிலைய அதிகாரி கே வெங்கடேஷ்வர் ரெட்டி ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவிக்கையில், “லட்சுமி நாராயணன் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி மதியம் 2.30 மணி அளவில் மருந்துவமனைக்கு சென்றுள்ளார். மாலை 4.30 மணியளவில் அவர் ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட அறுவைசிகிச்சை இரண்டு மணி நேரம் நடைப்பெற்றுள்ளது.

மயக்கமருத்து செலுத்தப்பட்ட அவர் கண்விழிக்காததால் அவரது தந்தைக்கு இரவு 7 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருகிலிருந்த, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனை பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டநிலையில், முடிகளின் அடிப்படையில் இறப்பிற்கான காரணங்கள் கண்டறியப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com