அரசு பேருந்தையும் விட்டுவைக்கலயா? வைரலாகும் Pre Wedding shoot!

அரசு பேருந்தில் Pre Wedding shoot நடத்திய ஜோடியின் வீடியோ வைராகியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு ஒரு தரப்பு எதிர்ப்பும், மறு தரப்போ ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
viral pre wedding photoshoot
viral pre wedding photoshootpt

திருமணத்திற்கு முன்பு Pre Wedding shoot நடத்துவது வழக்கமாகிவிட்ட நிலையில், பலரும் பல விதமாக Pre Wedding shoot ஐ நடத்துகின்றனர். மலை, அருவி, கடற்கரை என்று தொடங்கி, விவசாய நிலங்களில் கூட Pre Wedding shoot நடத்திய காட்சிகளை காண முடிகிறது. ஆனால், ஹைதாராபாத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி, அரசு பேருந்தில் நடத்திய Pre Wedding shoot தற்போது விவாதப்பொருளாகியுள்ளது.

Pre wedding shoot
Pre wedding shootpt desk

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், கரம்பிடிக்க இருக்கும் இருவர், அரசு பேருந்தில் Pre Wedding shoot ஐ நடத்தியுள்ளனர். மணமகள் பேருந்தின் முன்புக்கம் இறங்கி வர, மணமகன் பேருந்தின் பின்பக்கம் இறங்கி வருகிறார்.

viral pre wedding photoshoot
புதுக்கோட்டை: ‘பொதுப் பாதையை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டனர்’ - ஆட்சியரிடம் மக்கள் புகார்

வழக்கமான Pre Wedding shootதான் என்றாலும், வித்தியாசமான shoot ஆக இருக்கிறதே என்று பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில், ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்கனவே அதிகமாக இருக்கிறது.

இதேபோன்று பலரும் அரசு பேருந்துகளில் Pre Wedding shoot நடத்த திட்டமிட்டால், பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். இதனால், காதல் ஜோடிகள் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், யாருக்கும் இடையூறாக இல்லாத இந்த ஜோடியின் செயலை கண்டிக்க தேவை இல்லை என்று கூறும் சிலர், அந்த தம்பதிக்கு Happy married Life என்று வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com