“சைவம் உண்பவர்களுக்கு மட்டுமே அனுமதி” - IIT-ல் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு விடுதி செயலாளரின் பதிலென்ன?

ஐஐடி மும்பையில் விடுதி ஒன்றின் கேண்டீன் சுவர்களில் 'சைவ உணவுகள் உண்பவர்கள் மட்டும் இங்கு அனுமதிக்கப்படுவார்கள்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
IIT BOMBAY
IIT BOMBAYAPPSCIITB tweet

கடந்த வாரம் மும்பை ஐஐடியின் விடுதியில் உள்ள கேண்டீன் சுவர்களில், ‘சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்கார அனுமதிக்கப்படுவார்கள்’ என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. கேண்டீன் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர், சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இது குறித்த விசாரணையில் கேண்டீனில் சுவரொட்டியை ஒட்டியது யார் என்று தெரியாது என்று அங்கு பணி புரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

என்று மாறும் இந்த தேசம்..?
என்று மாறும் இந்த தேசம்..?

அதேசமயம், அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தின் பிரதிநிதிகள் இந்த சம்பவத்தை கண்டித்தனர். மேலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், “கல்லூரியில் உணவுப் பிரிவினைக்கான கொள்கைகள் எதுவும் இல்லை. தனிநபர்கள் சிலர் சில குறிப்பிட்ட பகுதிகளை சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டும் என தெரிவித்து மற்ற மாணவர்களை அங்கிருந்து வெளியேற கட்டாயப்படுத்துகிறார்கள்" என தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து விடுதியின் செயலாளர் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “விடுதியில் உள்ள உணவகத்தில் சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கென தனியாக உணவு வழங்கும் வசதி உணவகத்தில் உள்ளது. ஆனால் அவர்கள் தங்களது உணவை உட்கொள்வதற்கு தனியாக இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. சில பகுதிகளை குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களுக்கானதாக பிரித்துக்கொண்டு, அப்பகுதியில் அசைவ உணவுகள் உண்பவர்களை உட்கார அனுமதிக்கப்பதில்லை என்று செய்திகள் வந்துள்ளன.

IIT BOMBAY
IIT BOMBAYPT WEB

இத்தகைய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு இடத்தில் இருக்கும் மாணவர்களை அகற்ற எந்த மாணவருக்கு இங்கு உரிமை இல்லை. இச்சம்பவம் மீண்டும் தொடர்ந்தால் கட்டாய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்படுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com