HMPV வைரஸ் தொற்று
HMPV வைரஸ் தொற்றுweb

HMPV வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை | திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

HMPV வைரஸ் பரவல் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: எழில்

இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.

திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, ”HMPV வைரஸ் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும்.

திருப்பதி
திருப்பதிகோப்புப் படம்

வைகுண்ட ஏகாதிசி தினமான 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை திருமலையில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். டிக்கெட் இல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.

HMPV வைரஸ் தொற்று
புல்லுமேடு கானகப் பாதையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான அனுமதி நேரம் குறைப்பு – காரணம் என்ன?

வைகுண்ட ஏகாததி அன்று காலை திருமலையில் ஏழுமலையானின் தங்க தேரோட்டமும், 11-ஆம் தேதி காலை சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com