மகாராஷ்டிரா
மகாராஷ்டிராமுகநூல்

ஆட்டம் காட்டிய மழை; உதவிய இஸ்லாமிய குடும்பத்தினர்.. ஒரே மேடையில் இரண்டு மதங்களின்படி 2 திருமணம்!

மகாராஷ்டிராவில் இந்து மற்றும் இஸ்லாமிய குடும்பங்கள் ஒரே மேடையில் இணைந்து திருமண விழாவை கொண்டாடினர். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
Published on

புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் கடந்த 20 ஆம் தேதியன்று, திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்ருதி மற்றும் நரேந்திரா தம்பதிக்கு இந்து முறைப்படி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதேசமயம் அருகிலிருந்த மற்றொரு மண்டபத்தில் இஸ்லாமிய குடும்பம் ஒன்றின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்துவரும் நிலையில், சன்ஸ்ருதியின் திருமணம் நடைப்பெற்ற இடத்திலும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. லேசாக தூர ஆரம்பித்த மழை பிறகு ஆட்டம்காண ஆரம்பிக்கவே, இதனால் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திறந்தவெளி புல்வெளி சேதமானது. தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அங்கு திருமணத்தை நடத்த முடியாத நிலை உருவானது. இதனால், கவலை கொண்ட சன்ஸ்ருதி குடும்பத்தினர் எப்படி திருமணம் நடத்துவது என்று தெரியாமல் தடுமாறி நின்றனர்.

இந்தநிலையில்தான், உடனே பக்கத்து ஹாலில் முஸ்லீம் தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதை கவனித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த சன்ஸ்ருதியின் மாமா, `உங்களது ஹாலில் திருமண சடங்குகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதனை கேட்ட அந்த முஸ்லீம் குடும்பத்தினர் எதுவும் யோசிக்காத ஹாலில் திருமணத்தை நடத்த ஒப்புதல் கொடுத்தனர். முதலில் இந்து முறைப்படி சன்ஸ்ருதி தம்பதிக்கு திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து முஸ்லிம் தம்பதியின் திருமண வரவேற்பு நடந்தது. இரு திருமண தம்பதியும் மேடையில் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மகாராஷ்டிரா
தூத்துக்குடி | பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது - அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

இது குறித்து மணமகளின் தந்தை சேத்தன் கவாடே கூறுகையில்,''எதிர்பாராத நெருக்கடியின்போது முஸ்லிம் குடும்பம் நம்பமுடியாத கருணை காட்டியது'' என்று குறிப்பிட்டார். இரண்டு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில் - இந்தியாவில் மட்டுமே நடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். முஸ்லிம் குடும்பத்தினர் இந்து குடும்பத்தினரை தங்களது திருமண விருந்திலும் கலந்து கொள்ள செய்து விருந்து உபசாரம் செய்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com