சுயசார்பு இந்தியா திட்டத்தின் மைல்கல்.. அதிநவீன போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்வில், இந்திய கடற்படைக்கு ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க் கப்பல்கள் அர்ப்பணிக்கப்பட்டன. இவை 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும். இந்த கப்பல்கள் ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க் கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவற்றை, விசாகப்பட்டினத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்வில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடற்படையில் முறைப்படி இணைத்து வைத்தார்.
ஐஎன்எஸ் உதயகிரி MAZAGON DOCK கப்பல் கட்டும் நிறுவனத்தால் மும்பையில் உருவாக்கப்பட்டது. ஐஎன்எஸ் ஹிம்கிரி கொல்கட்டாவில் GARDEN REACH கப்பல் கட்டும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு வெவ்வேறு கப்பல் கட்டும் தளங்களில் உருவாக்கப்பட்ட 2 போர்க் கப்பல்களை, கடற்படை ஒரே நாளில் இணைத்துக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.
பின்னர் பேசிய ராஜ்நாத் சிங்க், இந்த 2 போர்க் கப்பல்களும் சுயசார்பு இந்தியாவின், ஒரு தெளிவான எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார். இவற்றின் பயணம், இந்தியாவின் பெருமையின் அடையாளம் என்றும் நமது தொலைநோக்கு பார்வைக்கு சான்று எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த 2 போர்க்கப்பல்களும் கடலில் மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளில் ஒரு 'கேம்சேஞ்சர்' ஆக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
இந்த இரண்டு கப்பல்களும், ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ்கட்டப்பட்டுள்ளன. இவற்றில்அதிநவீன வடிவமைப்பு, ஸ்டெல்த்தொழில்நுட்பம், மற்றும் மேம்பட்ட ஆயுத அமைப்புகள்பொருத்தப்பட்டுள்ளன. இந்தக்கப்பல்களில் நீண்ட தூரம் சென்றுதாக்கும் ஏவுகணைகள், அதிவேகபிரம்மோஸ் ஏவுகணைகள், உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள், டார்பிடோ லாஞ்சர்கள், மற்றும் மேம்பட்ட போர்மேலாண்மை அமைப்புகள் போன்ற பலஅத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள்உள்ளன. இந்த கப்பல்கள்மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில்பயணிக்கும் என்றும் ஒரேமுறையில் சுமார் 5 ஆயிரத்து 500 கடல்மைல் தூரம் வரை கடக்கும் வகையிலும்உருவாக்கப்பட்டுள்ளன. இந்தகப்பல்கள் இந்திய கடற்படையின்கிழக்கு கடற்கரை பாதுகாப்புத் திறனைபன்மடங்கு அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.