‘அடேங்கப்பா!’ அதிக ஊதியம் வாங்கிய இந்திய CEO-க்கள்... Forbes வெளியிட்ட பட்டியல்!
இந்திய நிறுவனங்களில் 2023 ஆம் நிதி ஆண்டில் அதிகளவில் ஊதியம் வாங்கிய தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியல், இங்கே:

* ஹெச் சி.எல் (HCL) டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் ஆண்டுக்கு ரூ.130 கோடியை ஊதியமாக பெற்றுள்ளார்
* விப்ரோ (WIPRO) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தியரி டெலாபோர்ட் ரூ.82 கோடியை ஆண்டு ஊதியமாக பெற்றுள்ளார்.

* இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலில் பரேக் (INFOSYS) ஆண்டுக்கு ரூ.56.44 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார்.
* டிசிஎஸ் (TATA CONSULTANCY SERVICES) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாத் ரூ.29.16 கோடியை ஆண்டு ஊதியமாக பெற்றார்.

ராஜேஷ் கோபிநாத்தின் ராஜினாமாவிற்கு பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கே. கிருத்திவாசன் பொறுப்பேற்றார்.
* இந்துஸ்தான் (HINDUSTHAN) யூனிலிவர் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் மேத்தா ரூ.22.36 கோடி ரூபாய் ஆண்டு ஊதியமாக பெற்றுள்ளார்.

இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிட்டெடின் (Indian Hotels Company Limited) தலைமை செயல் அதிகாரி புனீத் சத்வால் தனது ஆண்டு ஊதியமாக ரூ.18.2 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார். தாஜ் குழுமத்தின் ஒரு பகுதியான இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிட்டெட் ஓய்வு விடுதிகளை நடத்துவது, விமான சேவைகளை வழங்குவது போன்ற பல தொழில்களை செய்கிறது.