உத்தராகண்ட்
உத்தராகண்ட்முகநூல்

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து... 7 பேர் பரிதாப மரணம்!

உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தார்நாத் தாமில் இருந்து குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் காடுகளில் விழுந்து விபத்துள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட விமானத்தில், விமானி உட்பட ஏழு பேர் பயணித்துள்ளனர்.

file image
file image

விமானி உட்பட 7 பேரும் சென்ற ஹெலிகாப்டர் சிறுது நேரம் மாயமான நிலையில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதில் பயணித்த 7 பேரின் நிலை என்ன? என்பது குறித்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்தநிலையில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் (7 பேர்) இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி மற்று 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . கேதார்நாத் பள்ளத்தாக்கின் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்
காசாவில் போர் நிறுத்தத்திற்கு வாக்களிக்காத இந்தியா - மத்திய அரசை விமர்சித்த காங்கிரஸ்!

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளதாகவும், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் உத்தரகண்ட் சட்டம் ஒழுங்கு துணைத் தலைவர் டாக்டர் வி முருகேஷன் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமானம் விபத்து ஏற்பட்டு அதில் பயணித்த 242 பேரில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தநிலையில், இந்த விபத்து மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com