இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
இன்றைய முக்கியச் செய்திகள்!  

தமிழ்நாட்டை அதிரவைத்துள்ள திருச்சி நகைக்கடை கொள்ளைச் சம்பவம். புதுக்கோட்டையில் சுற்றி வளைக்கப்பட்ட வடமாநிலத்தவர் 5 பேரிடம் தனிப்படை தீவிர விசாரணை

அடுத்த 48 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் வருகையொட்டி மாமல்லபுரத்தில் முதலமைச்சர் ஆய்வு. இரு தலைவர்களுக்கும் வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக மூத்த தலைவர்கள் ஆலோசனை

ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைக்க தமிழக அரசு சார்பில் பரிந்துரை செய்யப்படும் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 

காந்தியடிகளின் உருவம் பொறித்த 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி - மகாத்மாவின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதாக குஜராத் விழாவில் பேச்சு

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி நாள். மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com