HEADLINES| மசோதாவுக்கு ஒப்புதல் தொடர்பான தீர்ப்பு முதல் நிதிஷ்குமாரின் பதவியேற்பு வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு முதல் பிஹார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்குமார் வரை விவரிக்கிறது.
நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்... சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்...
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு... இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு...
மதுரை, கோவைக்கு NO METRO என மத்திய அரசு நிராகரித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... சென்னைக்கு போராடி பெற்றது போல கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும் என்றும் உறுதி...
சபரிமலையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தகவல்... பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பணியில் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை...
பிஹாரில் 10ஆவது முறை முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்... நிதிஷ் உடல்நிலை குறித்து சர்ச்சை நிலவும் நிலையில் மீண்டும் முதல்வராக தேர்வு...
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு... ஷிண்டே கட்சி நிர்வாகிகளை வளைக்கும் பாஜகவினர் குறித்து முறையிட்டதாக தகவல்...
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை மீட்க இன்டர்போல் உதவியை வங்கதேசம் நாட உள்ளதாக தகவல்... ஹசீனாவை காப்பாற்ற வேண்டும் என இந்தியாவுக்கு அவாமி லீக் கட்சி பிரமுகர்கள் வேண்டுகோள்...
இந்தோனேசியாவில் கடும் சீற்றத்துடன் வெடித்த செமுரு எரிமலை... 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் புகை வெளியேறுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
ஜெமினி 3 என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட ஏஐ மாடலை வெளியிட்டது கூகுள்... ஜியோ 5ஜி அன்லிமிட்டெட் டேட்டா பயனாளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு இலவசம் என அறிவிப்பு...
ஜெர்மனியில் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே குளிர்காலம்... கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

