HEADLINES | IAS, IPS அதிகாரிகள் மாற்றம் முதல் தொடரை முழுமையாக வென்ற இந்தியா வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, IAS, IPS அதிகாரிகள் மாற்றம் முதல் தொடரை முழுமையாக வென்ற இந்தியா வரை விவரிக்கிறது.
உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா... 4.18 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளியது.
9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு... கூட்டுறவுத் துறை செயலராக இருந்த சத்யபிரதா சாகு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு மாற்றம்.
தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 70 காவல் உயரதிகாரிகள் இடமாற்றம்... 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாகவும், 7 ஐஜிக்கள் ஏடிஜிபிக்களாகவும், 3 டிஐஜிக்கள் ஐஜிக்களாகவும் பதவி உயர்வு...
சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக நியமனம்... சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வர் தயாள், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியானார்...
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்... 19 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு
சென்னையில் இன்று மாலைமுதல் நாளை வரை கடற்கரைகளில் குளிக்கவோ, இறங்கவோ தடை.... கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைப்பு.
புதுச்சேரிக்கு நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்கள் உடனடியாகபறிமுதல் செய்யப்படும்... மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் இன்றும் நாளையும் செயல்படாது... மென்பொருள் பராமரிப்பு, தணிக்கை பணிகள் காரணமாக 2 நாட்கள் இயங்காது என அறிவிப்பு...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.... வரும் 3ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு.
இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்... இந்திய மகளிர் அணி, தொடரை முழுமையாக வென்று அசத்தல்..

