headlines for the morning of december 20th 2025
cm stalin, indiax page

HEADLINES | முதல்வரின் நெல்லை பயணம் முதல் தொடரை வென்ற இந்தியா வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழக முதல்வரின் நெல்லை சுற்றுப்பயணம் முதல் தொடரை வென்ற இந்தியா வரை விவரிக்கிறது.
Published on

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழக முதல்வரின் நெல்லை சுற்றுப்பயணம் முதல் தொடரை வென்ற இந்தியா வரை விவரிக்கிறது.

  • எஸ்ஐஆருக்கு பிறகு தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்... 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

  • வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்.. ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

  • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு... 19 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் எட்டு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்...

  • ஜனவரி 5ஆம் தேதிக்குள் அரசியல் கூட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.. கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

  • நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... ரெட்டியார்பட்டியில் தமிழர்களின் நாகரிகத்தை பறைச்சாற்றும் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

headlines for the morning of december 20th 2025
voter listx page
  • சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்குத் தடை விதிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்... இரு இன நாய்களையும் புதிதாக வாங்கி வளர்த்தால் உரிமையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

  • வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர்காற்று... தலைநகரில் காற்று மாசில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தண்ணீர் தெளிக்கும் பணி மும்முரம்...

  • வங்கதேச மாணவர் தலைவர் மரணத்தால் மீண்டும் வெடித்த கலவரம்... பத்திரிகை அலுவலங்களுக்கு தீவைப்பு; நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் தீவிரம்...

  • தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இருபது ஓவர்கள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி... அகமதாபாத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்...

  • டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்கள் இன்று வெளியாகும் என தகவல்... சூர்யகுமார் தலைமையிலான அணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

headlines for the morning of december 20th 2025
IND v SA | கடைசி ஓவர் வரை திக்.. திக்.. Ro-Ko அதிரடிக்கு SA பதிலடி.. போராடி வெற்றிபெற்ற இந்திய அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com