HEADLINES | முதல்வரின் சவால் முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுத்த தமிழக முதல்வர் முதல் முதல்முறையாக ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வரை விவரிக்கிறது.
இந்தியாவிலேயே சித்தாந்த ரீதியாக பதிலடி கொடுக்கும் ஒரே மாநில கட்சி திமுக... சங்கிப் படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது என அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்...
அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்... இன்ஜினே இல்லாத கார் அதிமுக என உதயநிதி விமர்சனம்...
ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி... திமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உரை...
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு... அரசியல் சூழல், தேர்தல் கூட்டணி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவில்லை என பேட்டி...
வாக்குத் திருட்டுக்கு எதிராக டெல்லியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி... பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து செயல்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம்...
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது அன்புமணி தரப்பு... விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு...
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை கழகமாக மாற்றிய ஓ.பன்னீர்செல்வம்... டிசம்பர் 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பெயர் மாற்றம்...
மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்துக் கொண்ட மெஸ்ஸி, சச்சின் டெண்டுல்கர்... இரு ஜாம்பவான்களும் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து கொண்ட நெழ்ச்சி சம்பவம்...
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம்... சாலை விபத்துகள், விமான தாமதம் என இன்னல்களை சந்திக்கும் பொதுமக்கள்...
முதல்முறையாக ஸ்குவாஷ் உலக கோப்பையை வென்றது இந்திய அணி... சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி அபாரம்...

