“ஞானவாபி மசூதி இடத்தில் இந்துக்கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள்” - தொல்லியல் துறை ஆய்வறிக்கை

ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்துக்கோவில் இருந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஞானவாபி
ஞானவாபிபுதிய தலைமுறை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

ஞானவாபி
”உண்மையில் அதை முதல் மந்திரி வீடு கட்டும் திட்டம் என்றுதான் சொல்லணும்” - திமுக எம்.பி கனிமொழி

இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், அங்கு இந்திய தொல்லியல் துறையினர் கடந்த ஆண்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில், அந்த அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதில், ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இந்துக்கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த இந்துக்கோயிலின் ஒரு பகுதி, தற்போது மசூதியின் சுவராக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த கோயில், 17 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தொல்லியல் துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com