”உண்மையில் அதை முதல் மந்திரி வீடு கட்டும் திட்டம் என்றுதான் சொல்லணும்” - திமுக எம்.பி கனிமொழி

பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எப்படியும் குற்றவளிகளை திமுக அரசு கைது செய்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.
MP Kanimozhi
MP Kanimozhipt desk

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, குமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...

Anto  merlin
Anto merlinpt desk

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமை.. அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது குறித்து?

சென்னையில் திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறை , குற்றவாளிகளை கைது செய்ய தீவிரமாக தேடி வருகிறது. இது போன்று மோசமாக ஒரு இளம் பெண்ணை நடத்திய நபர்கள் யாரையும் விட்டு விட முடியாது. எப்படியும் திமுக அரசு குற்றவளிகளை கைது செய்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதிமுகவினர் போராட்டம் அறிவித்துள்ளார்கள், அதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அப்படி கைது செய்த பிறகு நாங்கள் போராட்டம் அறிவித்ததால் கைது நடந்துள்ளது என கூறுவார்கள்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து..

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முக்கால் பங்கு தொகையை தமிழக அரசு வழங்குகிறது பிரதம மந்திரி திட்டத்தை உண்மையிலேயே முதல்மந்திரி திட்டம் என்று தான் கூற வேண்டும். இந்த திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

100 நாள் வேலை திட்டத்தின் நிலை?

தமிழகம் உட்பட நாடு முழுவதும் யாருக்கும் 100 நாள் வேலை திட்டத்தை கொடுக்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு 367 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக அவர்களே பதில் அளித்துள்ளார்கள். இது சம்பந்தமாக அண்ணாமலை பொய் சொல்லலாம் அல்லது மத்திய அரசு தவறாக சொல்லியிருக்கலாம்.

Annamalai
Annamalaifile

பிரதான் மந்திரி கிசான் திட்டம் குறித்து?

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் திட்டம் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது, எதை வேண்டுமானாலும் புனைந்து பேசினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து?

தூத்துக்குடியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் முடிவெடுப்பார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, இதில் முக்கியமாக பெண்களுக்கு அதிகபடியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com