மத்திய பிரதேசம்: கொலைக் குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்ததை நடுரோட்டில் கேக்வெட்டி கொண்டாடிய நண்பர்கள்!

நாடு முழுவதும் கொலை மற்றும் குற்றங்கள் அதிகரித்து வரும் அதே சமயத்தில் போலிசாரும், அவற்றை தடுத்து குற்றங்களைக் குறைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் கொலைகளும் குற்றங்களும் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கிறது .
கொலை குற்றவாளி
கொலை குற்றவாளிகூகுள்

நாடு முழுவதும் கொலை மற்றும் குற்றங்கள் அதிகரித்து வரும் அதே சமயத்தில் போலிசாரும், அவற்றை தடுத்து குற்றங்களைக் குறைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் கொலைகளும் குற்றங்களும் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கிறது .

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நண்பனுக்கு ஜாமீன் கிடைத்ததை, நண்பர்கள் நள்ளிரவில் நடுரோட்டில் கேக்வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தம் வகையில் நடந்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் கபில் யாதவ். இவரின் மேல் கொலை குற்றவழக்கு இருந்து வரும் நிலையில் இவரை கைது செய்த போலிசார் வழக்கை நடத்தி வந்தனர். இந்நிலையில், இவர் ஜாமீன் கேட்டு கோர்டில் விண்ணப்பிக்கவும், இவருக்கு இருதினங்களுக்கு முன் நள்ளிரவில் இவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதைக்கேட்டு மகிழ்ந்த கபில் யாதவின் நண்பர்கள், இந்த மகிழ்ச்சியை கொண்டாட நினைத்தனர்.

கொலை குற்றவாளி
வாரிசுகள் இருந்தபோதும், ரூ 10,80,000 கோடி சொத்தை அறக்கட்டளைகளுக்கு கொடுத்த தொழிலதிபர்... யார் அவர்?

அதன்படி சிறையில் இருந்த கபில்யாதவை, கான்வாயில், ஒரு விஐபி ரேஞ்சுக்கு சைரன்கள் இடைவிடாமல் ஒலிக்க, எட்டு ஒன்பது கார்கள் வரிசையாக கார்கள் அணுவகுத்து, (சில கார்களில் நம்பர் பிளேட் இல்லை) மாலை மரியாதை செய்து கூட்டி வந்தது மட்டுமல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், நடு ரோட்டில் வெடிவெடித்தும் கேக் வெட்டியும் உரத்த குரலில் கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இவர்கள் தாங்கள் அநாகரிகமாக கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே குவாலியரைச் சேர்ந்த சி.எஸ்பி .,நாகேந்திர சிங் சிகார்வாரின் உத்தரவின் பேரில், முரார் காவல் நிலையம் மற்றும் படகான் அவுட்போஸ்ட் ஆகியவற்றின் கூட்டுக் குழு, கொண்டாட்டத்தில் உள்ள குற்றவாளிகளின் பட்டியலைத் தொகுத்தது. வாகனங்களில் இருந்த சைரன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலிசார் விசாரணையில் அது கபில் யாதவின் கான்வாய் என்று தெரியவந்தது,

கான்வாய் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களின் குற்றப் பதிவுகளை போலீஸார் தற்போது சோதனை செய்து வருகின்றனர். ஊர்வலத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற உள்ளடக்கத்தை விரும்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கபில் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிபந்தனைகளை போலீசார் பரிசீலித்து, ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com