குஜராத் - பாலம்
குஜராத் - பாலம்முகநூல்

குஜராத் | பாலத்தில் வாகனங்கள் இருந்தும் சுவர் எழுப்பிய அதிகாரிகள்..

குஜராத்தில் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றுப் பாலம் கடந்த 2 தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
Published on

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா - முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் இந்த பாலம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த பாலம் கடந்த ஜூலை 9ஆம் தேதி காலை 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.

அப்போது அந்த பாலத்தில் சென்ற 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இதில் அந்த வாகனங்களில் இருந்த 19 பேர் பலியானார்கள். மேலும் பலர் மாயமானார்கள். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குஜராத்
குஜராத்முகநூல்

இந்த பாலம் மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பாலத்திற்கு மாற்றாக ரூ.212 கோடியில் புதிய பாலம் கட்ட அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், அந்த பாலத்தின் வழியாக வாகனப் போக்குவரத்தை தடை செய்ய ஒரு சுவர் கட்டப்பட்டது.. ஆனால் அந்த சுவருக்கு அந்த பக்கமாக 2 வாகனங்கள் இருந்துள்ளது. அப்படி அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது..

குஜராத் - பாலம்
குஜராத் | திடீரென இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்.. விபத்தில் 10 பேர் பலி!

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட அந்த சுவரின் ஒரு பக்கத்தை இடிக்கதிட்டமிட்டுள்ளனர். அப்படி ஒரு பக்கத்தில் சுவரை இடித்து வாகனங்களை மீட்டப்பிறகு மீண்டும் அங்கு சுவர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com