குஜராத்
குஜராத்முகநூல்

குஜராத் | திடீரென இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்.. விபத்தில் 10 பேர் பலி!

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.
Published on

குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா - முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் இந்த பாலம் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அந்த பாலத்தின் ஒரு பகுதி யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.

குஜராத் உள்துறை ­­­­­­­­­­­­ ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை விபத்து நடந்ததுமே உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்."

குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், "மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் (slab) விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன" என கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலம் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குஜராத்
ஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி

இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவார நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com