குஜராத் | மனைவியைக் கொன்றபிறகு தன்னைத்தானே சுட்டுக் கொண்ட காங். தலைவரின் மருமகன்!
குஜராத் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சக்திசிங் கோஹிலின் மருமகன் யாஷ்ராஜ் கோஹில், தனது மனைவி ராஜேஸ்வரி ஜடேஜாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
குஜராத் காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சக்திசிங் கோஹில். இவரது மருமகன் யாஷ்ராஜ் கோஹில். குஜராத் கடல்சார் வாரிய அதிகாரியான இவர், தனது மனைவி ராஜேஸ்வரி ஜடேஜாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. பாவ்நகரைச் சேர்ந்த இந்த ஜோடி, இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணத்திற்குப் பிறகு அகமதாபாத்தில் குடியேறினர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.
காவல்துறையின் கூற்றுப்படி, நேற்று இரவு தம்பதியினர் இரவு உணவு அருந்திவிட்டு வீடு திரும்பிய பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜேஸ்வரியின் தலையின் பின்புறத்தில் சுட்ட அவர், பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

