200 ரூபாய் கோடி சொத்தை நன்கொடையாக அளித்து துறவு.. குழந்தைகள் வழியில் குஜராத் கோடீஸ்வர தம்பதி!

குஜராத்தைச் சேர்ந்த வசதியான தம்பதியொன்று, ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடை அளித்து துறவறம் மேற்கொண்டுள்ளனர்.
மனைவியுடன் பவேஷ் பண்டாரி
மனைவியுடன் பவேஷ் பண்டாரிட்விட்டர்

குஜராத் மாநிலம், ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. கட்டுமான தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன் ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டில் துறவறம் பூண்டனர். அப்போதே பவேஷும், அவரது மனைவியும் தாங்களும் துறவறம் பூண்டுகொள்ள உறுதி எடுத்துக்கொண்டனர். துறவுகொள்பவர்கள் தங்களது சொத்துகளை துறந்து, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து யாசகம் பெற்று உயிர் வாழ்வர்.

ஜெயின் துறவிகள் அமரும் முன் பூச்சிகளைத் துலக்குவதற்கு விளக்குமாறு, இரண்டு வெள்ளை ஆடைகள், யாசக கிண்ணம் ஆகியவற்றை மட்டுமே தங்கள் வசம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது அவர்கள் பின்பற்றும் அகிம்சைப் பாதையின் அடையாளமாகும். இந்த நிலையில், ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக வழங்கிய பவேஷ் பண்டாரி, இம்மாத இறுதியில் நடக்கும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக துறவு வாழ்க்கைக்குள் நுழைகின்றனர்.

இதையும் படிக்க: பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!

மனைவியுடன் பவேஷ் பண்டாரி
`எந்த சட்டம் இதை சொந்த முடிவென சொல்கிறது?’- 8 வயதில் துறவறம் பூண்ட சிறுமிக்கு எதிர்ப்பு

முன்னதாக, அவர்கள் 35 பேருடன் சேர்ந்து 4 கி.மீ. தூரம் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது இத்தம்பதியினர் அரச குடும்பத்தைப்போல உடையணிந்து ரதத்தின் மீது சென்றனர். பவேஷ் பண்டாரி குடும்பத்தின் துறவு முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த தம்பதியினர், பவரலால் ஜெயின் போன்ற சிலருடன் இணைந்து துறவு வாழ்வில் ஈடுபட உள்ளனர். பவரலால் ஜெயின் முன்பு கட்டுப்பாடான வாழ்க்கையை நடத்துவதற்காக பல பில்லியன்களை விட்டு விலகியிருந்தார்.

இந்தியாவில் நுண்ணீர் பாசன முறைக்கு (நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, குறைந்த நீரில் அதிக பரப்பில் சாகுபடி செய்து, அதிக விளைச்சல் பெற சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் உள்ளிட்ட நுண்ணீர் பாசன முறைகள்) முன்னோடியாக திகழ்ந்தவர் பவரலால் ஜெயின். அதேபோல் கடந்த ஆண்டு, குஜராத்தில் பல மில்லியனர் வைர வியாபாரி மற்றும் அவரது மனைவி இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். 2017ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பணக்கார தம்பதிகளான சுமித் ரத்தோர் மற்றும் அவரது அனாமிகா ஆகியோர் தம்மிடம் இருந்த ரூ.100 கோடி சொத்துகளை நன்கொடை அளித்துவிட்டு, தங்கள் மூன்று வயது மகளை, அவர்களின் தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு துறவிகளாக மாறிய செய்தி நாடு முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: The real kerala story| சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க 34 கோடி நிதி திரட்டிய மக்கள்

மனைவியுடன் பவேஷ் பண்டாரி
துறவறம் பூண்ட இளம்பெண்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com