குஜராத் | கொலை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது!
கொலை வழக்கில் குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைதர் வாசவா கைது செய்யப்பட்டார். நர்மதா மாவட்டத்தில் உள்ள தெடியாபாடாவில் ஒரு தாலுகா பஞ்சாயத்து ஊழியரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, எம்எல்ஏ மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, சைதர் வாசவா கைது செய்யப்பட்டார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தெடியாபாடாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆம் ஆத்மி கட்சியினர் வாசவாவை விடுவிக்கக் கோரினர்.
அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ”குஜராத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைதர் வாசவாவை பாஜக கைது செய்துள்ளது. விசாவதர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியடைந்த பிறகு, பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற கைதுகள் ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்தும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள்.
குஜராத் மக்கள் பாஜகவின் தவறான நிர்வாகம், குண்டர்கள் மற்றும் சர்வாதிகாரத்தால் சலிப்படைந்துவிட்டனர். இப்போது, மக்கள் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.