சைவம் சாப்பிடுபவர்களுக்கு ரயில்களில் தனி இருக்கைகள் ?

சைவம் சாப்பிடுபவர்களுக்கு ரயில்களில் தனி இருக்கைகள் ?

சைவம் சாப்பிடுபவர்களுக்கு ரயில்களில் தனி இருக்கைகள் ?
Published on

ரயில் பயணத்தின்போது பயணிகளின் உணவு தேர்வு முறைக்கு ஏற்ப சைவம் உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும், அசைவ உணவு சாப்பிடுவர்களுக்கு தனியாகவும் இருக்கை ஒதுக்க இந்திய ரயில்வேக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி உண்டு. ஆன்லைன் வழியாகவே, ரயில்வே கவுண்டர்களிலோ முன்பதிவு செய்யலாம். பயணம் செய்யும் நாளிலிருந்து 120 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல ரயில் பயண நேரங்களில் நமக்கு சாப்பாடு தேவைப்பட்டால் அதனையும் முன்பதிவு செய்யலாம். அதற்கு தனிக் கட்டணம் உண்டு. சைவ உணவும் வழங்கப்படுகிறது. அதேபோல அசைவமும் உண்டு.

இந்நிலையில் ரயில் பயணத்தின்போது பயணிகளின் உணவு தேர்வு முறைக்கு ஏற்ப வைச உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும், அசைவ உணவு சாப்பிடுவர்களுக்கு தனியாகவும் இருக்கை ஒதுக்க இந்திய ரயில்வேக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபத்தை சேர்ந்த சையத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 67 வயதான இவர் வழக்கறிஞரும் கூட. இந்த வழக்கு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து சையத் கூறும்போது, தான் சைவ உணவு முறைகளை மேற்கொள்வதால் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறினார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார். பொதுவாக சைவம் சாப்பிடுவர்களும், அசைவம் சாப்பிடுவர்களும் ஒன்றாக சாப்பிடும்போது சிலருக்கு அசௌகரியம் ஏற்படலாம். உணவு தேர்வு முறைக்கு ஏற்ப இருக்கைகளை ஒதுக்கீடு செய்யயும்பட்சத்தில் எந்தவொரு பயணிகளுக்கும் எந்த சிரமமும் இருக்காது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com