மிளகாய்த்தூள் To ஏலக்காய் | இந்திய மசாலாப் பொருட்களுக்கு உலக சந்தையில் சிக்கல்; இதுதான் காரணமா?

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகம், ஏலக்காய் போன்ற மசாலா பொருட்கள் குறித்த புகார்கள் மீது இந்தியா விரைவில் தீர்வு தர வேண்டும் என சர்வதேச வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மசாலா பொருட்கள்
மசாலா பொருட்கள்புதிய தலைமுறை

இந்தியாவிலிருந்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகம், ஏலக்காய் போன்ற மசாலாப்பொருட்கள் மிக அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துபவையாக இருக்கின்றன என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

சில இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. பூச்சிகள் அரிக்கக்கூடாது என்பதற்காக தெளிக்கப்பட்ட எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருந்ததுடன் சால்மோனல்லா பாக்டீரியாக்களும் இருந்ததாக அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: 2ஜி வழக்கின் தீர்ப்பை திருத்தம் செய்யக்கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர்!

மசாலா பொருட்கள்
'சில்லி சிக்கன்ல மசாலா குறைவா இருக்கு': ஓட்டல் உரிமையாளரை தாக்கியதாக 5 பேர் கைது

இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்தியா உரிய முக்கியத்துவம் தந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என GTRI எனப்படும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்திய மசாலாப்பொருட்களின் தரம் குறித்து தினம்தோறும் ஒவ்வொரு நாடாக கேள்வி எழுப்புவதாக அந்த அமைப்பின் இணை நிறுவனர் அஜித் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான புகார்களால் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மசாலாப் பொருட்கள் வணிகம் கேள்விக்குறியாகி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பொருட்கள் குறித்த புகார்கள் பற்றி அரசு அமைப்புகள் எதுவும் தெளிவான உரிய பதிலை இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் இது ஏமாற்றம் தருவதாகவும் அஜித் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

இப்புகார் குறித்து முழுத் தகவலையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: வாரணாசி| பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் காமெடி நடிகர்.. யார் இந்த ஷியாம் ரங்கீலா?

மசாலா பொருட்கள்
‘பொய்யான வாக்குறுதி’- பிரபல மசாலா நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com