Minister Veena George, landslidept desk
இந்தியா
வயநாடு பேரிடர்| உறவுகளை இழந்த குழந்தைகளை அரசு அரவணைத்துக் கொள்ளும் - அமைச்சர் வீணா ஜார்ஜ்
வயநாடு பேரிடரில் உறவுகளை இழந்த குழந்தைகளை அரசு அரவணைத்துக் கொள்ளும் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பேரிடரில் உறவுகளை இழந்த குழந்தைகளை அரசு ஒன்று சேர்த்து அணைத்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
Wayanad LandslidePT
அவர்களின் தொலைந்து போன கனவுகளை நாம் மீட்டெடுப்போம் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வயநாடு நிலச்சரிவில் உடமைகளை இழந்தவர்களின் கடன்களை முழுமையாக ரத்து செய்யப்படும் என கேரள வங்கி அறிவித்துள்ளது. கேரள வங்கியில் கடன் பெற்றிருந்தவர்கள், நிலச்சரிவில் வீடுகள், கடைகளை இழந்திருந்தால் அந்த கடன்கள் ரத்து செய்யப்படும் என விளக்கமளித்துள்ளது.